மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் பிரசித்திபெற்ற பிரசன்னமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பழவியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குடத்திருவிழா நடப்பது வழக்கம்.இன்று காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துவர பச்சைகாளி, பவளகாளி, கருப்பண்ணசாமி நடனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தனர். மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானமும் நடந்தது. இதில் பாஜக பொறுப்பாளர்கள் மோடிகண்ணன், நாஞ்சில் பாலு, வக்கீல் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார் உட்பட பழவியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
