டெல்லியில் ADMK-வை அடமானம் வைத்து விட்டு வந்து எடபாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டி

டெல்லியில் அதிமுக வை அடமானம் வைத்து விட்டு வந்து எடபாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிடுகிறார் – விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு – திமுக தேர்தல் வாக்குறுதி என்பது பைபிள் மாதிரி அந்த அளவிற்கு தேர்தல் அறிக்கை உள்ளதாகவும் திமுக கொள்ளை அடிக்க சேர்க்கப்பட்ட கூட்டணி அல்ல கொள்கைக்காக சேர்க்கப்பட்ட கூட்டணி என திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் கெளதமசிகாமணி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் கெளதமசிகாமணி, தேமுதிக மயிலம் வேட்பாளர் எல். வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய திமுக திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் கெளதமசிகாமணி கொள்ளை அடிக்க சேர்க்கப்பட்ட கூட்டணி அல்ல கொள்கைக்காக சேர்க்கப்பட்ட கூட்டணி தான் திமுக என்றும் டெல்லிக்கு போனால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் அளவிற்கு அதிமுக உள்ளதாகவும், மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை தமிழக முதல்வர் செய்துள்ளதாக தெரிவித்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதி பைபிள் மாதிரி அந்த அளவிற்கு தேர்தல் அறிக்கை உள்ளது. டெல்லி அமித்ஷாவிற்கு அதிமுக அடிமைபட்டு உள்ளதாக கெளதமசிகாமணி தெரிவித்துள்ளார்.

இக்குட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி , இன்று டெல்லி சென்று பாஜக விடம் அதிமுக வை அடகு வைத்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று குற்றம் சாட்டியவர் , இடைத்தேர்தலில் வெற்றி பெற்று குறுகிய மாதங்களில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். இந்தத் தொகுதியின் மக்களிடம் நிரந்தர இடத்தைப் பெற்று இருக்கிறவர் தான் அன்னியூர் சிவா மீண்டும் தேர்ந்தேடுத்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்யக்கூடியவர் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சிறந்த தொகுதியாக இந்த விக்கிரவண்டி தொகுதியை மாற்றி காட்டுவார் அவர் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடுகிற திருக்கோவிலூர் மயிலம் விக்கிரவாண்டி இந்த மூன்று தொகுதிகளும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராக பெருமையை ஈட்டி தர வேண்டியது தான் நமக்கு பெருமை என்று பொன்முடி தெரிவித்தார்

Exit mobile version