2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு தலைவர் பி.ஆர்.பான்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது . குறிப்பாக தமிழகத்தில் கார்ப்பரேட் மோகம் கொண்ட அரசியல் தலை தூக்கியிருக்கிறது . தமிழ்நாடு நில உரிமை சட்டம் -2023 மூலம் தமிழக விவசாயிகளுடைய முகவரி அழிக்கப்பட்டுள்ளது .சுதந்திர உரிமை பறிக்கப்பட்டுள்ளது . நிலத்தை தர மறுக்கும் விவசாயின் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திமுக 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க விவசாயிகளிடம் கருத்து கேட்கும் தகுதி இழந்துள்ளது. 2021 இல் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2,500 வழங்கியிருந்தால் இன்றைக்கு சத்தீஸ்கர் போன்ற பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படுவது போல் டன் 1 க்கு ரூ3200 ரூபாய் விலை கிடைத்திருக்கும் , அதை தடுத்து விட்டது. கரும்பு டன்னுக்கு ரூ4000 என கூறிவிட்டு இதுவரையிலும் வழங்காமல் ஏமாற்றி விட்டது, கல்வி கடன் ரத்து , நீர்ப்பாசன திட்டங்கள் மேம்பாடு உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை .ஆயிரம் ஏரிகள் தூர்வாடப்படும் என்று கூறப்பட்டது. இதுவரையிலும் தூர்வாரவதற்கான நிதியை நீர்ப்பாசனத் தொடக்கி ஒதுக்கீடு செய்யவில்லை. நெல்கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்கும் முயர்ச்சியை வேகமாக மேற்கொள்கிறார்கள் என குற்றம் சாட்டினார் .
