பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது நிலங்களை அபகரிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் .
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியனை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், கதிரேசன், கணபதி உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து தீவிரமான போராட்டத்தில் அப்பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.சட்ட விரோதமாக 4000 ஏக்கர் பரப்பிளான ஏரிகளை அகபகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மூலம் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகிது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதி மறு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகிறார். விவசாயிகள் மறுப்பு தெரிவித்தால் நிலத்திற்கான தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு நிலம் அத்துமீறி கையகப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும் . தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும். இதுகுறித்து அவசர கலந்தாலோசனை செய்வதற்காக வரும் டிசம்பர் 26 ஆம் தேதி சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) தேசிய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப் ஜக்தீப் சிங் தல்லேவால், ஹரியானா அபிமன்யு கொஹார், கர்நாடக சாந்தகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மன்னார்குடி வருகை தர உள்ளார்கள், அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசின் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவது குறித்த நடவடிக்கைய மேற்கொள்வோம் என்றார். மேற்கண்டவாறு பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார் .
FILE NAME : TVR- 25.12.2025-MANNARGUDI- P.R.PANDIAN-PRESS-MEET-NEWS.
