திருவாரூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபி கட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை ஏந்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் அஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட 33வது ஆண்டு நினைவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வகுப்பு மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
