வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை கால முற ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய் துறையில் பணிபுரிபவர்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் ஒப்பந்த தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை கைவிட வேண்டும் என்பன 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் (பெரா) 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணியை முடித்துவிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பணிச்சுமையை கலைய வாரத்திற்கு இரண்டு முறை முகாம் நடத்த வேண்டும் அதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பதினைந்து நாட்கள் நீண்ட விடுப்பு எடுத்து போராட்டம் செய்ய உள்ளதாக கூறினர்.














