உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென, இல்லையெனில் ரஷ்யா மீது மேலும் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக்கூடாது என்பதற்காக ரஷ்யா அந்த நாட்டின் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இது மூன்றாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர்; கோடிக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.
இந்நிலையில், வரும் தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் டிரம்ப், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “புடின் மிகவும் நன்றாக பேசுகிறார், அவர் சொல்வதை நம்புகிறேன்; ஆனால் செயலில் அதை எதிர்பார்க்க முடியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு சில காலமாக ஆயுத உதவி நிறுத்திய ட்ரம்ப், தற்போது மீண்டும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
“நான் 50 நாட்கள் காத்திருக்கிறேன். அதற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டாக வேண்டும். இல்லையெனில் 100% இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு விதிப்போம்” என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.