திருவாரூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் ரோல் மாயம் 8 ஊழியர்களிடம் இருந்து 13 லட்சம் வசூலிக்க உத்தரவு

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் ரோல் மாயம்… 8 ஊழியர்களிடம் இருந்து 13 லட்சம் வசூலிக்க உத்தரவு…

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் ரோல் மாயமான புகாரில் எட்டு ஊழியர்களிடமிருந்து ரூபாய் 13 லட்சம் வசூலிக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வழங்கும் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பயனிகளுக்கு வழங்கப்படும் முன்பதிவு இல்லாத 500 டிக்கெட்டுகளுக்கான ரோல் மாயமானதாக தெரிகிறது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வணிக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை குழு மூலம் விசாரணை நடந்தது.
விசாரணையில் டிக்கெட் ரோல் மாயமானது உறுதியானது டிக்கெட்டுகள் காணாமல் போனது தொடர்பான விசாரணை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு டிக்கெட் பேப்பரில் அதிகபட்சம் நாலு பேருக்கு டிக்கெட் வழங்கலாம். அதில் சீரியல் நம்பர் இருக்கும்…
ஒரு டிக்கெட்டில் 4 பேர் பயணிக்கலாம் என்பதால் கண்ணியாகுமரி - காஸ்மீர் வரை ஒரு நபர் கட்டணம் ரூ525 என கணக்கிட்டு ஒரு டிக்கெட் விலை ரூ.2100 என நிர்ணயித்தது.

500 டிக்கெட்டுகளுக்கும் கண்ணியாக்குமரி - காஷ்மீர் கட்டணம் கணக்கிட்டு ரூ.13 லட்சத்து பத்தாயிரம் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
பயணச்சீட்டு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எட்டு பேரும் தொலைந்த டிக்கெட்டுக்கு பொறுப்பு என முடிவு செய்யப்பட்டது..
மேலும் இவர்களிடம் இருந்து ரூபாய் 13 லட்சத்து 10 ஆயிரம் வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி திருவாரூர் ரயில்வே டிக்கெட் அலுவலகம் ஊழியர்களான லால் பகதூர், பசுபதி, உதயகுமார் ஆகிய மூன்று பேரும் தலா 2 லட்சத்து 62 ஆயிரம் என்றும், பாஸ்கரன், நிராஜ்குமார் சவுத்ரி, அருண் ராஜ், சுதர்சன், தமிழன்பன் ஆகிய ஐந்து பேரும் தல 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 எனவும், மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Exit mobile version