மின்சார்த்தை தொட்டாதல் தான் ஷாக் அடிக்கும் ஆனால் மின்கட்டணத்தை கேட்டாலோ ஷாக் அடிக்கிறது 67 சதவீாதம் மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் மின்கட்டணம் உயர்வால் தொழில்கள் அண்டை மாநிலத்திற்கு சென்றுள்ளது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அவர் சுற்று பயணம் செய்து வருகிறார் அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் அவர் பேசுகிறார். முதல் கட்டமாக காரைக்குடி ஐந்து விளக்கு பகுதி எம்.ஜி.ஆர்., சிலை அருகே அவர் பேசுகிறார். முன்னதாக அவரை கட்சி தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
மக்கள் வெள்ளத்தில் காரில் இருந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார் உடன் பா.ஜ., எச்.ராஜா, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிள் பங்கேற்றனர் பல்வேறு ஊழல்கள் இந்த ஆட்சியில் நடக்கிறது. மாநகராட்சியில் ஊழல் நடந்ததாக கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நட்நதது. மேயர் தனியாருக்கு லஞ்சத்தை பெற்று கொண்டு மாநகராட்சி இடத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். இவர்கள் பொறுப்புக்கு வந்தததே கொள்ளையடிக்கத்தான். ஆட்சிக்கு வந்ததும் இதற்கான தீர்வு காணப்படும். மேயர் தன்னிச்சையாக மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி 30 கோடி ரூபாய்க்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., அரசு அமைக்கப்பட்ட பிறகு விசாரிக்கப்படும். தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஊழலும் விசாரிக்கப்படும் அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன் உங்கள் கோரிக்கை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, தவறு இழைக்க பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்று தரப்படும். தி.மு.க., 2021 ஆட்சியில் வந்தபோது 525 அறிவிப்பு கொடுத்தார்கள். அதில் 10 சதவீத அறிவிப்பு மட்டும் தான் நிறைவேற்றினர். அதிலும் மக்களுக்கு முழுமையாக பலன் கிடைக்கவில்லை. உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் 28 மாதம் கழித்துதான் கொடுத்தீர்கள். சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். பெண்களை ஏமாற்றி, பொதுமக்களை ஏமாற்றினீர்கள்.அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகுதான் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். தி.மு.க., மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது. தொண்டர்களிடம் செல்வாக்கு இழந்து விட்டது.
தற்போது விதிகளை திருத்தி மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுப்பதாக கூறியுள்ளார்கள். 52 மாதம் ஏமாற்றி விட்டு இன்னும் எட்டு மாதத்திற்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் சட்டமன்ற தேர்தலை வைத்து மக்களை ஏமாற்றுகின்ற செயல். அப்போதே கொடுத்திருக்கலாம் 32 மாதம் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. தி.மு.க., சந்தர்ப்பவாத அரசு. இந்த மாநகராட்சி பகுதி பேரூராட்சி ஊராட்சியில் இஷ்டப்படி வரியை உயர்த்தி விட்டார்கள். தி.மு.க., ஆட்சியில் எந்த வரியையும் உயர்த்த மாட்டோம் என தேர்தல் அறிவிப்பில் அறிவித்து விட்டு 150 சதவீதம் வரியை உயர்த்தி விட்டீர்கள் தொழில்வரி, குப்பைக்கும் வரி. குப்பைக்கு வரி போடும் இந்த அரசாங்கம் தேவையா.வரிமேல் வரிபோட்டு மக்களை துன்பத்துக்கு உள்ளாகியது இந்த அரசு மின்சார்த்தை தொட்டாதல்தான் ஷாக் அடிக்கும். மின்கட்டணத்தை கேட்டாலோ ஷாக் அடிக்கிறது. 67 சதவீகிதம் மின்கட்டணத்தை உயர்த்து விட்டீர்கள்.
சிவசங்கர் என்ற அமைச்சர் ஏற்கனவே அ.தி.மு க. அரசில் மின்கட்டணம் கட்டியுள்ளார்கள். தற்போது எவ்வளவு மின்கட்டணம் என்று பார்க்லாம் மின்கட்டணம் உயர்வால் தொழில்கள் அண்டை மாநிலத்திற்கு சென்றுள்ளது அனைத்தையும் உயர்த்தியும் கடன் வாங்கி வருகிறார்கள். எதற்கு கடன் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு லட்சம் கோடி வருமானம் உயர்ந்தும் 4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். தி.மு.க., ஆட்சி முடிந்ததும் 5 லட்சம் கோடி கடன் சுமையை ஏற்றியுள்ளீர்கள். எந்த திட்டமும் வராமல் கடன் வாங்கியுள்ளார்கள். அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.மாநகராட்சி முதல் கடைக்கோடி பஞ்சாயத்து வரை கொள்ளை அடித்துள்ளனர் கொள்ளையடிப்பில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது புதிதாக வீடு கட்டுவோர் அனுமதி வாங்கி கட்டுங்கள் என்றால் பரவாயில்லை. ஏற்கனவே வீடு கட்டியவர்கள் எவ்வாறு அனுமதி பெறுவது. டீக்கடை முதல் லைசென்ஸ் வாங்க சொல்கின்றனர்.
டீக்கடை, அயன் கடைக்கு லைசென்ஸ் வாங்க சொல்கின்றனர். ஏழைமக்கள் எப்படி பிழப்பது ரோட்டோர பெட்டிக்கடையும் லைசென்ஸ் வாங்க வேண்டும். இதற்கு யார்தான் ஐடியாக கொடுக்கின்றனர். பொம்பை முதல்வர். கிராமப்புற மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.சி.டி.டி.வி கேமரா பொருத்த சொல்கி்னறனர். கடையோட விலையே கேமார விலைதான் இருக்கும். மோசமான அரசாங்கம் வரவேண்டுமா?உங்களுடன் ஸ்டாலின் என்று ஊர் ஊராகக அட்டை கொடுத்து அரசு அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர். கட்சியினரை பயன்படுத்துங்கள். 46 கோரிக்கைக்கு அட்டை கொடுத்துள்ளனர். மக்களிடம் 46 பிரச்சினை இருப்பதாக அவரே ஒத்துக் கொண்டார். ஆட்சி போகும் போது தீர்வு காணப்போகிறாரா?ஆஸ்பத்திரியில் இருந்து டேபிள் போட்டு உயர் அதிகாரிகளை அழைத்து மீட்டிங் போட்டுள்ளார். 18 நாள் வெளிநாடு போனீர்களே அப்போது ஏன் மீட்டிங் போடவில்லை.
தொழில் முதலீடு என்று சொல்லி விட்டு சைக்கிள் ஓட்டியுள்ளார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக மக்கள் நன்றாக புரிந்தவர்கள் வெளிநாடு போனார் ஸ்டாலின். அங்குள்ள தொழில் அதிபர்களை அழைக்காமல், தமிழ்நாட்டு தொழிலதிபர்களை அழைத்து அங்கு ஒப்பந்தம் ஏன் போடவேண்டும். இங்குள்ள பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ய பேனாரா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவையா.10 ரூபாய் பாலாஜி என்றால் அனைவரக்கும் தெரியும். தமிழகத்தில் டாஸ்மாக் ஆறாயிரம் கடைகள் உள்ளது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு இதில் மட்டும் 15 கோடி மேலிடத்திற்கு செல்கிறது. ஆண்டுக்கு 5500 கோடி இதில் கொள்ளையடிக்கின்றனர்.2001-ல் தி.மு.க., பாஜ.., கூட்டணி இருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் நல்லது நாங்கள் வைத்தால் தவறா?ஸ்டாலின் எதை வேண்டுமானானலும் சொல்லுங்கள். எங்களுடய கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. எங்களின் கூட்டணிதான் 100க்கு 100 சவீதம் வெற்றி பெறும்.