குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு:- மயிலாடுதுறை எம்எல்ஏ திறந்து வைத்தார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 95,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுளன. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 140 நேரடி கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார். அந்த வகையில், குத்தாலத்தை அடுத்த வாணாதிராஜபுரம் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதுநிலை மேலாளர் தரக்கட்டுப்பாடு செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து கொள்முதலை பார்வையிட்டார். இதில், நுகர்வோர் வாணிபக் கழக அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


















