எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது, பெற்றோர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும், ஆக்கூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகை தேவயானி பேச்சு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட நடிகை காதல் கோட்டை தேவயானி கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மலர் கொத்துக்கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசிய நடிகை தேவயானி, வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மற்றும் இழக்கக்கூடாது, ஒவ்வொரு நொடியும் வீணாக்காமல் உழைக்க வேண்டும். பெற்றோரை விலை கொடுத்து வாங்க முடியாது, அவர்களுக்கு உரிய மரியாதையை மாணவர்கள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

















