திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவைகள் சங்கம் சார்பாக மாநில தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி இன்று ஒரு நாள் மாபெரும் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கோஷம் எழுப்பி கோரிக்கையை வலியுறுத்திய போது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப தெலுங்கானாவில் 4016 ரூபாயும் டெல்லியில் 5000 ரூபாயும் பாண்டிச்சேரியில் 5800 ரூபாயும் என பல்வேறு மாநிலங்கள் மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை பன்மடங்கு உயர்த்தி வழங்கி வருகிறது தமிழகத்தில் மட்டும் உதவித் தொகையை உயர்த்தாமல் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது. தமிழக அரசு மட்டும் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக்கு 1500 ரூபாயும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் வழங்கி வருகிறது இந்த உதவி தொகையானது தற்போது உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வுக்கு ஏற்றது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனில்லாமல் இருப்பதால் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழக அரசும் மாற்று திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி தங்களுடைய அடையாள போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

















