மன்னார்குடி உப்புக்கார தெரு ஐயப்பன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உப்புக்கார தெரு ஐயப்பன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து கோவிலில் அச்சார்ச்சனை நடத்தினர் . இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கப்பட்டு மாலை 6 மணி வரை நடைபெறும் . ஐயப்பன் சுவாமி முன்பு 18 படிகளை வைத்து பூஜை நடைபெற்றது சரண கோஷங்கள் முழங்க நடைபெற்ற இந்த லட்சார்ச்சனையில் புஷ்பங்களை ஐயப்ப சுவாமி திருவுருவத்தின் மீதும் படிக்கட்டுகள் மீதும் தூவி தீபம் ஏற்று வைத்து சரண கோஷங்கள் முழங்கினர் . இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர் .
