77- வது குடியரசு தின விழாவையொட்டி அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி போலீசாரின் மரியாதை

77- வது குடியரசு தின விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி அமைதிப் புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் – மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் 11 லட்சத்து 40 ஆயிரத்து 471 ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார் விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Exit mobile version