77வது குடியரசு தினத்தை முன்னிட்டு குழல் கதிர்வேட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஹிந்து முஸ்லிம் என அனைவரும் ஒன்று கூடி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னை புழல் கதிர்வேடு 31 வது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு பல்வேறு பகுதிகளில் நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றினார்.
இதில் ஒரு பகுதியாக சென்னை புழல் கதிர்வேடு மூர்த்தி நகர் பகுதியில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்று கூடி தேசிய கொடியினை ஏற்றி அதற்கு வீரவணக்கம் செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து குடியரசு தினம் மட்டுமின்றி பண்டிகைகள் தீபாவளி பொங்கல் மொகரம் கிறிஸ்மஸ் போன்ற அனைத்து சுப துக்க நிகழ்ச்சிகளில் மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று கூடி தாங்கள் பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர் எனவும் இவை இந்நாட்டின் எடுத்துக்காட்டாக புனல் கதிர்வேடு மூர்த்தி நகர் பகுதி விளங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதில் காங்கிரஸ் கட்சி 31 வது வார்டு மாமர உறுப்பினர் சங்கீதா பாபு திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
