திருவாரூரில் தந்தை பெரியாரை 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .
இதன் தொடர்ச்சியாக திமுக நகர கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திரு உருவப் படத்திற்கு பூண்டி. கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதேபோல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருஉருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


















