மன்னார்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி மதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளையொட்டி மதிமுக மாவட்ட செயலாளர் பலசந்திரன் , நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மன்னார்குடி ருக்மணி பாளையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. பின்னர் தருச்சியில் நடைபெற இருக்கும் மதிமுக மாநாட்டிற்கு மேள தாளங்கள் முழங்க பஸ், வேன் , கார்களில் தொண்டர்கள் மாநாட்டிற்கு பங்கேற்க சென்றனர்
