மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளினை முன்னிட்டு பாஜக சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது

மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளினை முன்னிட்டு பாஜக சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது :-

இந்தியாவின் பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அன்பகத்தில் மரக்கன்றுகள் பாஜக சார்பில் நடப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்று நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு மாவட்டத் துணைத் தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன், தேசிய பொது குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், அய்யா சுரேஷ்,பொதுச் செயலாளர் SDM. செந்தில், மயில்ரவி ஜெகப்பிரியா, மணிமேகலை, ராமு மற்றும் அருள்ராஜ் முன்னாள் ஓ பி சி அணி பொதுச் செயலாளர் தங்க.சரவணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு பாஜகவினர் மதிய உணவினை பரிமாறினர். முன்னதாக தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமரின் நிகழ்வை முன்னிட்டு ஐந்து ரூபாய் தபால்தலையை ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மடத்தின் ஜீயர் ஸ்ரீமதேவாயு சித்தராமானுஜ தாச ஜீயர் சுவாமிகள் வெளியிட்டார். பின்னர் தபால்தலைக்கு மலர் தூவி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நிர்வாகிகள் அனைவரும் முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version