சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம் செய்து பக்தர்கள் வழிபாடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயில் செவ்வாய் ஸ்தலமாகவும் விளங்குகிறது இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி – அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது மேலும் கோவில் கொடிமரம் அருகே வண்ண மாவினால் சிவன் உருவம் மற்றும் சிவலிங்கம் வரைந்து தீபம் ஏற்றினர்.மேலும் கோவில் முழுவதும் 3008 தீப விளக்குகள் ஏற்றி அதிகாலைவரை எண்ணை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.மேலும் சென்னை கோயம்புத்தூர், திருச்சி தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளும் பெங்களூர் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட வைத்தீஸ்வரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சித்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
