அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மேலையூரில் இசைப்பிரியரான அனுமனுக்கு பிடித்த தோடி, சுருட்டி, நாட்டை, சண்முகப்பிரியா ஆகிய ராகங்கள் கொண்டு இசை ஆலாபனை செய்து வழிபாடு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தருமபுர ஆதீன கட்டளைத் தம்பிரான் சாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மருதூர் கிராமம் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வரதராகினி மடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், கஜ பூஜை கோ பூஜை அஸ்வ பூஜை ஒட்டக பூஜை ரிஷப பூஜை போன்ற சிறப்பு பூஜைகளோடு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இசைப்பிரியர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சுருட்டி தோடி, சண்முகப்பிரியா, நாட்டை உள்ளிட்ட ராகங்கள் கொண்டு இசை ஆலாபனை நடைபெற்றது. ஹோமங்கள் மற்றும் கஜ பூஜை கோ பூஜைகளில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.















