தந்தை பெரியாரின் பிறந்த நாளினை முன்னிட்டு மயிலாடுதுறையில் TVKசார்பில் திருவுருவ சிலைக்கு மாலை மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்த நாளினை முன்னிட்டு மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது :-

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் பேரணியாக கோஷம் எழுப்பியபடி வருகை தந்தனர். பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மகளிர் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Exit mobile version