தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைநகர்களில் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மேனகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்..”உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும்.. நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.. தேர்தல் வாக்குறுதி 356-யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…” உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது..மாவட்ட இணை செயலாளர் துர்கா தேவி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மருந்தாளுநர் சங்க மாவட்ட பொருளாளர் தியாக சுந்தரம், நெடுஞ்சாலைத்துறை மகாலிங்கம், அரசு ஊழியர் சங்கம் தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மேனகா, மாவட்டச் செயலாளர் அன்பரசி, மாவட்ட இணை செயலாளர் துர்கா தேவி, கிராம சுகாதார செவிலியர் சங்கம் பரமேஸ்வரி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version