கேரளா மாநிலத்தில் அரசு பேருந்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதியவர் ஒருவர், பொதும்மக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவரால் தட்டிக்கேட்ட சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த சம்பவம் திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த பேருந்தில், ஒரு சிறுமி தனது சகோதரியுடன் பயணம் செய்து கொண்டிருந்தாள். அந்த சிறுமியின் அருகில் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்திருந்த முதியவர் ஒருவர், அவரிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனை அறிந்த சிறுமியின் சகோதரி, தன்னுடைய செல்போனில் சம்பவத்தை பதிவுசெய்துள்ளார். பின்னர், தன்னலம் மறந்து துணிச்சலுடன் எழுந்து, குற்றச்சாட்டுக்குள்ளான முதியவரை மோதலுக்கு உட்படுத்தி, அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த முதியவரிடம் கடுமையாக கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முதியவர், கை கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொண்டது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.