செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் நான்காவது நாளாக செவிலியர்கள் போராட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் செவிலியர்களின் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது, பணி நிரந்தரம் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செவிகளை செவிலியர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செவிலியர்கள் அதனை கண்டிக்கும் விதமாக தொடர்ந்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன இன்று நான்காவது நாளாக இந்த போராட்டம் தொடரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள்
கூடுவாஞ்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வாக்குறுதி நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியாக உள்ளனர், அரசு அடக்குமுறையை மீறிப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கூடுவாஞ்சேரியில் இன்று நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
