திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் 18 டிசம்பர் வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை அத்த கூலி முறையினை ரத்து செய்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதி 356 இன் படி எம் ஆர் பி தொகுப்பு ஊதியம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், செம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீட்டை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை கண்டித்தும்.
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினரை அழைத்துபேச கோரியும் , செவிலியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் முழக்கமிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றிடவேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் குமார், வட்டக்கிளை செயலாளர் தம்பிதுரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
















