பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வருச்சூர் செல்வம் வத்தலகுண்டு ஈடன் கார்டன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் சுகன்யா லாட்ஜில் வரிச்சூர் செல்வம் தங்கிருப்பதை தெரிந்து மதுரை திருப்பரங்குன்ற காவல் நிலைய அன்றைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்ய திண்டுக்கல் சுகன்யா லாட்ஜிக்கு வந்துள்ளார். அப்போது ஆய்வாளர் ஜெயச்சந்திரனை கொலை செய்யும் நோக்கில் தகராறாரில் ஈடுபட்டு உள்ளார் அந்த வழக்கிற்காக பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் தொடர்ந்து நான்கு வாய்தாகளுக்கு ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து வத்தலகுண்டு பெரியகுளம் ரோட்டில் உள்ள ஈடன் கார்டன் ஹோட்டலில் வருசூர் செல்வம் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் வத்தலகுண்டு ஈடன் கார்டன் ஹோட்டல் பகுதியில் வரிச்சூர் செல்வம் இருப்பதை அறிந்து திண்டுக்கல் போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.