கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தினக்கூலிகளாக வேலை செய்து வரும் இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சுமார் 28 வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா அரசால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள 68 வீடுகளிலும் குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, மின்சார கட்டணம் உட்பட அனைத்தும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதற்கான அரசின் அறிவிப்பானை இருப்பதாக கூறி அதனை வீடுகளில் ஒட்டுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த அப் பகுதி மக்கள் அறிவிப்பாணையை ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியில் இவர்கள் பல முறை கேட்டும் இந்த வீடுகள் இடிக்கப்பட மாட்டாது எனவும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க இருப்பதாகவும் கூறி தங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில் தற்போது திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு சில இங்குள்ள வீடுகளை இடிப்பதற்கு அறிவிப்பாணை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனை உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு இந்த வீடுகளை அகற்ற அதிகாரிகளின் முயற்சியை முறியடிப்பதோடு இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அனைத்து வீடுகளுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பேட்டி: உஷாராணி
நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை
