ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள் தயாரிக்க கூடாது என மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுரை

ருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவி நாயுடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர்.கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்துகொண்டு அறிவுரைகளை வழங்கினர். மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயம் என்றும், தரமான முலப்போருட்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது என்றும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்க கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு. விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருட்களை நியூஸ் பேப்பரில் மடித்து தரக்கூடாது என மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுறுத்தினார். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ 9444042322 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் மேலும் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version