கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட் விடுத்துள்ளது.
இதற்கமைய, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம், கோட்டக்கலில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் ஜூன் 28ம் தேதி, கோட்டக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இளம்பெண் ஒருவர் பின்னர் மூளைச்சாவுக்கு உள்ளாகினார்.
அவருடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையை அடுத்து, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வார்டுகளிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாநில மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு, அதிக மக்கள் திரள் கூடும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.