NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குப்பம்கிராமத்தில் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து வருடம் வருடம் ஏபிஎல் என்று சொல்லக்கூடிய கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக 13-வது வருடமாக ஆலங்குப்பம் மைதானத்தில் விளையாட்டை துவக்கி வைத்து NFITU தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளருமான சிவா அவர்களும் மற்றும் ஆலங்குப்பத்தின் தர்மகத்தா சிவா அவர்களும் முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் அவர்கள் கூறுகையில் அடுத்த வருடங்களில் 14வது ஏபிஎல் கிரிக்கெட்டை மிக விமர்சனமாக கொண்டாட வேண்டும் என்று பேசி இருந்தார் ஆலங்குப்பம் பாலா அவர்கள் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆலங்குப்பம் கிராமத்தில் இருக்கின்ற அனைத்து இளைஞர்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடிவருகின்றனர் எந்த ஒரு போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இதுபோன்று விளையாட்டை பொங்கல் விழா காலங்களில் விளையாடி அடுத்து வரும் சந்ததிகளுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்கள் மற்ற கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் இது போன்று செயல்பட்டால் எதிர்கால இளைஞர்களை போதையின் பாதையில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படலாம். என்று தெரிவித்திருந்தார் பிறகு அடுத்த வருடங்களில் எங்களுடைய BRM பவுண்டேஷன் இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குமளிக்கின்ற வகையில் போதுமான நிதியை வழங்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டு வீரர் விஜயகுமார் அன்பு மதன்குமார் ரமேஷ் மற்றும் கதிரவன் அவர்கள் மேற்பார்வையில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்இந்த விளையாட்டில் பங்கு பெறுகின்ற குழு தலைவர்களின் பெயர் தமிழ் ராக்கர்ஸ் அணி அனைத்து தலைவர் கதிரவன் ராயல் ஸ்ட்ரைக்கர்ஸ் ராஜ்குமார் பவர் இட்டஸ் அஜித் குமார் சூப்பர் கில்லிஸ் அணித்தலைவர் அன்பு மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்
