மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொல்லியல் துறை சார்பில் கடல் சார் அகழ்வாராய்ச்சியில் 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த 7 நாட்களாக நீருக்கடியில் கடலால் ஆள் கொண்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டு உணர்ந்து ஆராயும் விதமாக இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய ஆய்வில் டென்மார்க்கில் இருந்து வாணிபத்திற்காக பூம்புகார் துறை முகத்திற்கு வந்திருந்த 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் ஒன்று நீருக்கடியில் தென் பட்டுள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.
