திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட பாகாநத்தம் ஊராட்சியில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வடமதுரை ஒன்றியம், பாகாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மலைப்பட்டி கிராமத்தில் இந்தச் சமுதாயக்கூடம் அமையவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில்: வடமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் B.சுப்பையன் பாகாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மலைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது இல்ல விசேஷங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக ஒரு சமுதாயக்கூடம் தேவை என நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தச் சமுதாயக்கூடம் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
