46.5 கோடி செலவில் கட்டப்பட்ட மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட்டது . 3 அல்லது 4 மாதங்களில் பெண்களுக்கான மிக பெரிய சிப்காட் தொழில் பூங்கா , டெக்ஸ்டைல் பார்க் துவங்கப்பட உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் ரூ 46.5 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா , குத்து விளக்கு ஏற்றி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர் . பின்னர் அமைச்சர் கே.என் நேரு கல்வெட்டை திறந்து வைத்தார் . அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் பழைய பேருந்து நிலையமாக இருந்தபோது தொலைதூரத்தில் இருந்து பயணித்து மன்னை வரும்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்தால் கழிவறை நாற்றம் ஊர் வந்துவிட்டது என எழுப்பும் . இது எப்படிப்பட்ட ஊர் , யார் யாரெல்லாம் வாழ்ந்த ஊர் 10 ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் கெஞ்சி கூத்தாடி பேருந்து நிலையத்தை புதிப்பித்து தாருங்கள் என்றேன் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை . அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அமைச்சர் கே.என்.நேருவால் மிகப்பெரிய மாற்றம் மன்னார்குடிக்கு வரப்போகிறது என்று நம்பினேன் அதன்படி நடந்துள்ளது . அடுத்து நமது ஊராட்சி பகுதிகளில் மிகப்பெரிய சிப்காட் தொழில் பூங்கா , டெக்ஸ்டைல் பார்க் துவங்கப்பட உள்ளது . அதில் பெண்களுக்கு 1000 நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் .மிக விரைவாக 3 அல்லது 4 மாதங்களுக்குள் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்றார் . அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு அனைத்து குளங்களையும் சீர்செய்து இணைக்கும் பணி ரூ 185 கோடிக்கு திட்டங்களை நிறைவேற்ற பட இருக்கிறது . கிட்டத்தட்ட மாநகராட்சிக்கு மட்டும் நான்கரை ஆண்டு காலத்தில் ரூ 500 கோடிகளுக்கு மேல் தமிழக முதல்வர் வழங்கி இருக்கிறார் . இங்கு உள்ள கடைகள் அனைத்தும் நீதிமன்றத்தின் மூலாக அனைவருக்கும் பெற்று தரப்படும் என்றார் . அமைச்சர் கே.என் நேருவுக்கு வெள்ளி செங்கோல் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வழங்கினார் .
