2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக முன்னெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம், அதற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் திரையுலக நட்சத்திரம் விஜய், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) அந்த செயலியை உத்தியோகபூர்வமாக வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக கட்சியில் புதிய உறுப்பினர்களை விரைவாக பதிவு செய்யும் நோக்குடன், டிஜிட்டல் முறையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலியின் வாயிலாக எந்தவொரு இடத்திலிருந்தும் ஆதார் அடிப்படையிலான பதிவு செய்யும் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உறுப்பினர் பட்டியலை விரைவாக உருவாக்கி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம் தவெகவினது என்று கூறப்படுகிறது.