விழுப்புரம் புதுக்கோட்டையை தொடர்ந்து திருவாரூரிலும் மல்லுக்கட்டில் ஈடுபட்ட அதிமுகவினர். உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜை கடுமையாக பொது வெளியில் வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி..
திருவாரூர் அருகே மாங்குடி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி முழுமையாக பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள்., நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் கூறியதாக தகவல் வெளியானது. இதனால் பல இடங்களிலும் பெரும்பாலான அதிமுகவினர் போராட்டத்திற்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறி வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூறிய நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா உத்தரவிட்ட நிலையில் அதனை மீறி வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இதனால் அதிருப்தியான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரது கட்சி பொறுப்புகளையும் பறித்தார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள் என அனைவரது பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அவர்களுக்குஈ பதிலாக அந்த பதவியில் புதிதாக நிர்வாகிகளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார்.
அதன்படி அஅதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக 28 ஆண்டுகாலம் பொறுப்பு வகிக்க காமராஜ் பதவியில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திருவாரூர் நகர கழக செயலாளர் பதவி வகித்த ஆர் டி. மூர்த்தி திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆரம்பத்தில் இருந்தே காமராஜ் தரப்புக்கும் ஆர்டிமூர்த்தி தரப்புக்கும் ஒத்து வராத சூழல் நீடித்து வந்தது. இந்த நிலையில் புதிதாக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற ஆர்.டி.மூர்த்தி பல்வேறு இடங்களிலும் கட்சி கூட்டங்கள் நடத்தி வருகிறார். அதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் க்கு எதிராகவும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூர் அருகே மாங்குடியில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மறுக்கும் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான காமராஜ் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக வெளுத்தெடுத்ததார் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் டி மூர்த்தி.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக சரியாக ஒரு நிமிடம் மட்டுமே பேசினார். மீதமுள்ள அவரது பேச்சுக்கள் அனைத்தும் முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜர் குறித்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது…
செங்கிபட்டியில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, விவசாயி வீட்டுப் பிள்ளையாக பிறக்கவில்லை என கவலைப்பட்டார். இப்போது வேண்டுமென்றால் நீங்கள் இறந்து விட்டு மீண்டும் விவசாயி வீட்டு பிள்ளையாக பிறந்து கொள்ளுங்கள். ஆனால் எங்களுக்கு அனைத்து விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்வோம் என கூறியதை, அதை செய்யுங்கள். அது மட்டுமில்லாமல், ஆறு சிலிண்டர் தரேன் என்று கூறினீர்கள் ஆறு ஆண்டுகள் முடிந்த பிறகு தான் தருவீர்களா..? அதே போல மகளிர்க்கு 2500 ரூபாய் தருவேன் என்று கூறினீர்கள். இதனை நம்பி அனைத்து மகளிர்களும் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் . இப்போது எல்லோருக்கும் வாழைப்பழத்தை வாயில் வைக்கிறீர்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தற்போதைய முதல் ஜோசப் விஜய் மாமா சார் என்று கூப்பிட்டார். நாங்கள் உங்களை மாப்பிள்ளை சார் என்று கூப்பிடுகிறோம். அப்படி கூப்பிட்டலாவது நீங்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தாருங்கள்.
ஒன்றுபட்ட டெல்டா விவசாயிகளுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் காவேரி காப்பாளர் என்ற பட்டத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கினார். அதே காவேரி காப்பாளர் இன்று ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதை நீங்கள் இடையூறு செய்கிறீர்கள். ஓ. எஸ். மணியன் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..? 1972 முதல் கட்சியில் இருக்கிறார். ஓ. எஸ். மணியனை நீங்கள் மட்டகரமாக பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் எடப்பாடிக்கு எதிராக காலி செய்தீர்கள். அதேபோல புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தையும் காலி பண்ணீர்கள் .
அன்றைய தேதியில் எடப்பாடியார் அறிவுறுத்தலின்படி ஓ எஸ் மணியன் நம்மை தாங்கி பிடிக்காவிட்டால் இன்று அண்ணா திமுகவே இல்லை. அண்ணா திமுகவை அழித்துவிட்டு சினிமா நடிகரிடம் போய் சேர்ந்து இருப்பார்கள். நாமெல்லாம் வாயில் விரலை வைத்து உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த சூழலை தடுத்து நிறுத்தியவர் எடப்பாடியார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஓஎஸ் மணியன்.
அம்மா சொன்னது மாதிரி நூறு ஆண்டு ஆனாலும் கட்சி உடையாது. அப்படியே தான் இருக்கும். தொண்டனும் அப்படியே தான் இருப்பான். தலைவன் வேணால் தப்பித்தனம் பண்ணலாம். ஓடலாம் ஓடியாரலாம். அவரவர் தகுதிக்கு அவர்வர்கள் தகுதிக்கு நடந்து கொள்ள வேண்டும்.
பத்துவருட அமைச்சர், 28 வருட மாவட்ட செயலாளர்,நான்காவது முறை சட்டமன்ற உறுப்பினர் நீங்கள். அண்ணா திமுக காரனை போகக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்..?உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது..? கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியா.? இல்லை நீங்களா..?ஏற்கனவே நீங்கள் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று போனீர்கள். திரும்பி வந்து காலில் எழுந்து மன்னிப்பு கேட்டீர்கள். இப்போது எடப்பாடியார் ஒரு அறிவிப்பை அறிவித்திருக்கிறார். கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று. அதை தடுப்பதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. மேலும் மேலும் நீங்கள் தவறு செய்கிறீர்கள். தவறை திருத்திக் கொள்ளுங்கள். தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நான்தான் அடக்கி வைத்திருக்கிறேன். விழுப்புரம், புதுக்கோட்டை மாதிரி ஆகிவிட்டால் ரொம்ப அசிங்கமாகிவிடும். விழுப்புரம், புதுக்கோட்டை மாதிரி நாங்கள் இருக்கிறோமா..? எந்த அளவுக்கு நாங்கள் மரியாதை நடந்து கொள்கிறோம். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
