திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குருவப்பா மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். இந்தப் பல்நோக்கு முகாம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவிகள் 292 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார் முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் பிரசன்னா, பள்ளிச் செயலாளர் ராஜ்குமார், பள்ளி குழு உறுப்பினர் கௌதம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், பழனி அருகே உள்ள பச்சலநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட கிராம அறிவு மையக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றினார். அதன்பின்பு, ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த விழாக்களில் மருத்துவத்துறை துணை இயக்குநர் அனிதா, வட்ட வழங்கல் வட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர், நகர இளைஞரணி லோகநாதன், ஒன்றியச் செயலாளர் சௌந்தரபாண்டியன், நெய்க்காரப்பட்டி பேரூர் செயலாளர் அபுதாஹிர், ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை, இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், பேரூராட்சி மன்றத் தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன், துணைத் தலைவர் சகுந்தலாமணி தங்கவேல் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
















