மயிலாடுதுறை அருகே, திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல் நடத்தி ஜமாத் மற்றும் ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரம், 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு, திமுக பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் புகார் :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடி கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரை, அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து தள்ளி வைத்துள்ளனர். இதன் காரணமாக கிராமத்தில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட எந்த விதமான நிகழ்வுகளுக்கும் நூருல் அமீனுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வந்துள்ளனர். முத்தவள்ளி எனப்படும் ஜமாத் நாட்டாமை பொறுப்பு வைத்து வரும் திமுக பொதுக்குழு உறுப்பினரான அர்ஷத் என்பவர், இதற்குக் காரணம் என்றும், ஜமாத் தேர்தல் தொடர்பான முன்விரோதம் காரணமாக தன்னை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளதாகவும், இது குறித்து கேள்வி கேட்டதற்காக தன்மீது அர்ஷத் உள்ளிட்ட ஐந்து நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் நூருல் அமீன் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்திருந்தார். திமுக பிரமுகர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி அரசர் பாலாஜி விவகாரம் தொடர்பாக 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் நூருல் அமீன் வழங்கினார் தொடர்ந்து தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
பைட் :-
நூருல் அமீன் – பாதிக்கப்பட்ட நபர்
