சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்திற்கு அனுமதி:

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிவாயு இறக்குமதி செலவைக் குறைக்கவும், குழாய் வழியாக இயற்கை எரிவாயு (Natural Gas) விநியோகிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை நகரத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க, நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில், 260 கிலோமீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பராமரிக்கும் பகுதிகளில் வருகிறது. இதற்கான தேவையான அனுமதியையும் மாநில கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ளது

Exit mobile version