புதுடில்லி :
தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான NIRF 2025 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நாட்டின் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், டாப் 100 கல்வி நிறுவனங்களில் 17 இடங்களை தமிழ்நாடு பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த பிரிவு:
சென்னை ஐஐடி – 1வது இடம்
பொறியியல் பிரிவு:
சென்னை ஐஐடி – தொடர்ந்து 10 ஆண்டுகளாக 1வது இடம்
திருச்சி என்ஐடி – 9வது இடம்
மாநிலப் பல்கலைக்கழகங்கள் பிரிவு:
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (மேற்கு வங்கம்) – 1வது இடம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் – 2வது இடம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் – 10வது இடம்
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “தேசிய அளவில் தொடர்ந்து முதலிடம் பிடிக்கிறோம் என்பதற்கு பேராசிரியர்களின் அர்ப்பணிப்பு தான் முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.
