இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாஜகவினர் கொண்ட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக நகர‌தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், மோடி கண்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், வெற்றி கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version