நன்னிமங்கலம் தாய்,தந்தையை இழந்து வசித்துவரும் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்றஉறுப்பினர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் ,சுமதி தம்பதியர் இவர்களுக்கு ஸ்வாதி , ஸ்வேதா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் சுவேஷ்வர் என்கிற ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் தந்தை சிவக்குமார் தையல் கலைஞராக இருந்து குடும்பத்தை வழி நடத்தி உள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சுமதி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் . ஸ்வாதி , ஸ்வேதா இருவரும் கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பும் .மகன் சிவேஷ்வர் அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் . மனைவியை இழந்த சிவக்குமார் மூன்று குழந்தைகளையும் பராமரிப்பதற்காக தையல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளின் தந்தை சிவக்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் . தாய் தந்தையை இழந்த மூன்று பேரும் தனியாக கூரை வீட்டில் வசித்து வரும் மூன்று பேரும் பள்ளிக்கு செல்வதால் எந்தவிதமான வேலைக்கு செல்ல முடியாமல் போதுமான வருமானம் இன்றி அன்றாடம் வாழ்க்கையை நடத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர் .. இந்த மூன்று பேருக்கும் வீட்டின் அருகில் உள்ளவர்கள் அவர்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் மூன்று பேரும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தாமல் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இந்த மூன்று குழந்தைகளுக்கும் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் உயர் கல்வி கற்பதற்கு வழிகாட்ட வேண்டும் கூரை வீட்டில் இருக்கும் இவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு வீடு கட்டி தர வேண்டும் என குழந்தைகள் உட்பட அக்கம்பக்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் குழந்தை ஒருவருக்கு 2 ஆயிரம் வீதமும் உதயபாஸ்கரன் என்பவர் தானமாக 800 சதுர அடி இடத்தை வழங்கியுள்ளார். அதற்கு தமிழக அரசு பட்டா ஏற்பாடு செய்து தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஆகியோர் பட்டாவினை வழங்கினார் அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழந்தைகளிடமும் செல்போன் மூலம் நலம் விசாரித்து தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர் பாத்திமா பஷிரா தாஜ், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சிவரஞ்சனி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் வசுமதி, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version