திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த அரசு பேருந்து நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் என்ற பகுதியில் கடந்து சென்ற பொழுது.. தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள வாய்க்கால் சுவரின் மீது
மோதியதில் வாய்க்கால் சுவர் உடைந்து பேருந்து வாய்க்காலில் சாய்ந்துள்ளது.
இந்த விபத்தில்..பேருந்தில் பயணித்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படு காயம் ஏற்பட்டுள்ளது..
உடனடியாக அக்கம்பக்கத்தினர் நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நன்னிலம் பகுதியை சார்ந்த ராஜேந்திரன், லதா, ரமேஷ், மாசிலாமணி, அஸ்மியா, கமலாவேணி, லெனின், குமார், கலா, ராஜவேலு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
நன்னிலம் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மருத்துவமனையில் சிகிச்சை
