தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான ஜேஇஇ (JEE Main) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாமக்கல் மற்றும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பிஎஸ்ஆர் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மைய மாணவர்கள் இமாலய சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில், ராசிபுரம், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய கிளைகளில் பயின்ற மாணவர்கள் தேசிய அளவில் மிக உயர்ந்த சதவீத (Percentile) மதிப்பெண்களைப் பெற்று மாநிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். குறிப்பாக, எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிகள் மாணவர்களின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு தேர்வில் மாணவர் டி.எஸ்.தயாசாகர் 99.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து எஸ்.பி.செந்தூரன் 99.54 சதவீதம், எஸ்.அரவிந்த் 99.39 சதவீதம், ஏ.பிரணவ் ராஜகுமார் 99.16 சதவீதம், பி.சக்திபூமேஷ் 99.02 சதவீதம், என்.ஆர்.ரங்கவிகாஸ் 99.01 சதவீதம் மற்றும் எம்.எஸ்.பிரணீஸ் 99 சதவீதம் எனப் பல மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைக் குவித்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த மையத்தில் பயின்றவர்களில் 7 மாணவர்கள் 99 சதவீதத்திற்கு மேலும், 12 மாணவர்கள் 98 சதவீதத்திற்கு மேலும், 19 மாணவர்கள் 97 சதவீதத்திற்கு மேலும் மற்றும் 27 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த மகத்தான சாதனையைப் படைத்த மாணவர்களைப் பிஎஸ்ஆர் பினாக்கிள் கிளாசஸ் பயிற்சி மைய இயக்குநர் பி.சாய்ராம், எஸ்ஆர்வி பள்ளிகளின் செயலர் பி.சுவாமிநாதன், தலைவர் ஏ.ராமசாமி மற்றும் பொருளாளர் எஸ்.செல்வராஜன் ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் எம்.குமரவேல், ஏ.ஆர்.துரைசாமி, பி.சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் ஏ.செந்தில் மற்றும் முதல்வர்கள் பி.ஆர்த்தி, வள்ளியம்மாள் உள்ளிட்டோர் மாணவர்களின் கடின உழைப்பையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் பாராட்டி கௌரவித்தனர். நாமக்கல் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ள இந்த மாணவர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.














