விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் Dr.பெண் வேட்பாளர் அபிநயா மனு தாக்கல்

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் பெண் மருத்துவ வேட்பாளர் அபிநயா தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் வருகை புரிந்து மனு தாக்கல் செய்தார். அதிமுக, திமுக இலவசங்கள் தேர்தல் அறிக்கையாக அறிவித்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 23 ஆம் தேதி நடைபெறுவதால் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் வேட்பு மனுவானது இன்று தொடங்கிய நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் மருத்துவரான அபிநயா பொன்னி வளவன் இன்று நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான ஏர் உழுதல் கலப்பை விவசாயி சின்னத்துடன் நான்கு முனை சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்து விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய வந்த அபிநயா தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் வருகை புரிந்து மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடதக்கது. அதிமுக, திமுக இலவசங்கள் தேர்தல் அறிக்கையாக அறிவித்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்த அபிநயா போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version