விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 26ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்று வந்த முகாமில் விழுப்புரம் கீழ்ப்பெருபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதி முழுவதும் வீதிகளில் மரக்கன்று நடுதல் , துர்க்கை முத்துமாரியம்மன் கோவில், வண்ணான் குளக் கருப்பசாமி கோவில், திரௌபதி அம்மன் கோவில், பசுபதிஸ்வரர் கோவில், ஆகிய இடங்களில் தூய்மை பணிகளை மாணவிகள் மேற்கொண்டனர். இம்முகாமின் நிறைவு விழா நடைப்பெற்று .
அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு
நாட்டு நலப்பணி திட்ட முகாம் மூலம் பல்வேறு மக்கள் சேவை பணிகளை மேற்க்கொண்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு சால்வை இணைத்து பரிசுகளை வழங்கி கௌரவித்தார் அப்பொழுது மாணவிகளிடையே பேசிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் :
இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை
பன்ப்படுத்திக்கொள்ளவும், பக்குவப்படுத்தி கொள்ள கூடிய நிகழ்ச்சி எனவும், இவை
மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் என்றார். மேலும் ஒரு வார காலம் இப்பகுதியில் மக்கள் சேவையாற்றிய மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..காந்திபிறந்த நாளில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது சிறப்புமிக்கது.
தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்து கொண்டவர் காந்தி.
சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ஒரு சிலர் தான் ஞாபகத்தில் இருப்பார்கள்.
காந்தி நாட்டிற்கு இன்னும் தேவை என்பது தான் உண்மை என அவரது இறப்புக்கு பின்பும் தற்போது வரை உணர்த்துகிறது. அவரது வாழ்க்கை ஒர் அர்ப்பணிப்பு வாழ்க்கை.
சமுதாயத்திற்கு எனது வாழ்க்கை ஒரு செய்தி என கூறியிருந்தார் காந்தி. அதை சொல்ல ஒரு தைரியம் வேண்டும். மாணவ செல்வங்கள் எல்லாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசும் முதல்வரும் கல்வி, மருத்துவம் என இரு கண்களாக பார்ப்பதாகவும்,
கல்விதுறைக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளவர் முதல்வர் .
முதல்வர் செயல்பாட்டால் இன்று ஒவ்வொரு இல்லத்திலும் கல்வி ஊடுருவியுள்ளது. அவை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பார்த்தோம். பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் செயல்ப்படுத்தி வருகிறார்.
இவ்விழாவில் திண்டிவனம் கல்வி அலுவலர் சிவசுப்ரமணியன், நாட்டு நல பணிகள் திட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகரன், திட்ட அலுவலர் செந்தில்குமாரி, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை யமுனாபாய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரம்யா, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் குழந்தைவேலு, காங்கேயன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் மகாலட்சுமி வைத்தியநாதன், நகர செயலாளர் வெற்றி, கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம், பொது க்குழு உறுப்பினர் சம்பத், வார்டு செயலாளர் வைத்தியநாதன், பிரதிநிதி சந்தோஷ்,நகர தொண்டர் அணி அமைப்பாளர் கரண், நகர தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் சுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


















