வானூரில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி”  ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் வானூர் சட்டமன்றத் தொகுதி கோட்டக்குப்பம் நகரம் 25-ஆம் வார்டு, பூத் எண் 95-ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் பரப்புரை நடைபெற்றது.கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, மண்டல பொறுப்பாளர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களும், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்களும் கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வானூர் தொகுதி மேற்பார்வையாளர் எஸ்.கே.பி. கருணாநிதி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ. புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து, நகர கழகம் செயலாளர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version