‘உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்’ – பிசிசிஐ நிபந்தனை !

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது பிசிசிஐ முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இருவரும் டெஸ்ட் மற்றும் T20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் (ODI) போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால், அவர்களின் போட்டித் திறன் மற்றும் உடல் தகுதி குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், பிசிசிஐ வட்டார தகவலின்படி “அணிக்குத் தேர்வு பெற விரும்பும் வீரர்கள், குறிப்பாக மூத்தவர்கள், தங்களின் போட்டித் திறனை நிலைநிறுத்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ரோஹித் சர்மா வரவிருக்கும் சையத் முஷ்தாக் அலி T20 தொடரில் விளையாடத் தயாராக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விராட் கோலி இதுகுறித்து தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், ரசிகர்கள் அவரது தீர்மானத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிசிசிஐயின் இந்த முடிவு, வீரர்கள் தங்களின் போட்டி ரிதமையும் உடல் சுறுசுறுப்பையும் காப்பாற்றும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version