பீகார் தேர்தலில்BJPகூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர்  பூவை ஜகன்மூர்த்தி பேட்டி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜகன்மூர்த்தி பேட்டி

இன்று விழுப்புரத்தில் புரட்சி பாரதக் கட்சித் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி கட்சித் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பீகார் தேர்தலில் பட்டியல் இனத்தவரும் இஸ்லாமியர்களும் பெருமளவில் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர் பட்டியல் இனத்தவரின் பிரதான கட்சியான சிராஜ் பாஸ்வான் லோ ஜனசக்தி தொடர்ந்து பாஜகவுடன் பயணித்து வருகிறது பீகாரில் பாஜக வெற்றி தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று தெரிவித்தார் எஸ் ஐ ஆர் எனப்படும் தீவிர திருத்தப்பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் விடுபட மாட்டார்கள் இந்த பணி செய்வதற்கு ஒரு மாத காலமே போதுமானது என்று தெரிவித்தார். தமிழகத்தில் தலித் மக்களுக்கு கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக அரசு எந்தவித நலனையும் செய்யவில்லை மாறாக தலித் மக்கள் மீது அடக்குமுறைகளையும் குண்டாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளையும் போட்டு சிறையில் அடைத்தது துன்புறுத்தி உள்ளதாக தெரிவித்தார் . வரும் 2026 ஆம் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வரும் ஜனவரி மாதத்தில் திமுக கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்

Exit mobile version