மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;
“2024 ஜூன் மாதத்தில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு துணை மேயர் நாகராஜன் கேள்வி எழுப்பினார், தொடர்ந்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் முறைகேடு தொடர்பாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வரி முறைகேடு தொடர்பாக சிபிஎம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம், மாநகராட்சி ஆணையரே புகார் தந்துள்ளார், மாநகராட்சி ஆணையரின் கணினி பாஸ்வோர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளது.
ஒரு சிலர் மட்டுமல்ல அலுவலகம் அமைத்து வரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது, அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க கூடும், மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மதுரை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை என்ன ஆனது? பெரியார் பேருந்து நிலையம் வணிக வளாகம் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை, விதிமுறைகளுக்கு புறம்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைபெற்றது, ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி நடத்திய விசாரணை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்ட வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் ஆவணங்கள் இல்லாமல் அண்டர் ஸ்டாண்ட்டிங்கில் காச வாங்கிட்டு பல முறைகேடுகள் நடந்துள்ளது, உன் ஆட்சியில் நடந்ததை நான் கேட்க மாட்டேன், என் ஆட்சியில் நடப்பதை நீ கேட்காதே என அதிகாரிகள், அரசியல்வாதிகள் முறைகேடுட்டில் ஈடுபட்டுள்ளனர், மாநகராட்சி முறைகேட்டில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என தமிழக அரசு ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை.
மாநகராட்சியின் உயர் பொறுப்பில் தொடர்புடையவர்கள் சம்பந்தமில்லாமல் வரி முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை, அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதிகாரிகள் வரி முரைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது, தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை என்றால் எதிர்கட்சிகள் இவ்விவகாரத்தை மக்களிடம் தவறாக எடுத்து செல்லும், மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தான் இந்த பிரச்சனையை முதலில் பேசியது அதிமுக அல்ல, விசாரணைக்கு பின்னர் தான் வரி முறைகேடு எத்தனை ஆண்டுகள் நடைபெற்றுள்ளது என தெரியவரும், வரி முறைகேடு தொடர்பாக பேசுவதால் இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஒன்றிய அரசால் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் வேட்டையாடப்படுகிறார், கீழடியில் ஆய்வில் கண்டறியப்பட்டதை மட்டுமே கூறுவேன்.
அதற்கு மாறாக கூறுவது குற்றம் என அமர்நாத் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், அரசு ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் அமர்நாத் இராமகிருஷ்ணனனின் உறுதியை பின்பற்ற வேண்டும், ஆய்வாளர் ஸ்ரீராமனை வைத்து அறிக்கை தயாரிப்பது திட்டமிட்ட தமிழின விரோத நடவடிக்கை, கீழடியில் ஒன்றுமில்லை என சொன்ன அமர்நாத் இராமகிருஷ்ணனிடம் ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை தயார் செய்ய சொல்லியுள்ளது.
கீழடியின் காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய 5 ஆம் நூற்றாண்டு வரை என அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது, அமர்நாத் ராமகிருஷ்ணன் கூற்றை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டால் வட இந்தியாவின் நகர நகரத்திற்கு முன்னால் தென்னிந்தியாவில் நகர நாகரிகம் உருவானதா எனும் கேள்வி வருகிறது, பாஜக பொருளாதாரம், ஊழல் விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் ஆனால் தத்துவார்த்த ரீதியாக உறுதியாக இருப்பார்கள்.
கீழடி பாஜகவின் இந்துத்துவா அரசியல் தத்துவார்த்த நிலையோடு நடைபெறுகின்ற மோதல், வேத நாகரீகம் தான் பழமையானது என ஒன்றிய அரசு கூறும் கூற்றை பொய்க்கச் செய்யும் உண்மை அல்ல எனக் கூறுவது கீழடி, கீழடி உண்மைக்கு எதிராக ஒன்றிய அரசு போராடிக் கொண்டிருக்கிறது இந்தப் போராட்டம் எளிதில் முடியப்போவது இல்லை.
கீழடி நமது காலத்தில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதை நாம் இழந்து விடக்கூடாது, கீழடி அகழாய்வு 50 ஆண்டுகளுக்கு முன் கிடைத்து இருந்தால் அதன் வரலாறு அரசியல் சாசன புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அடுத்ததாகவும், வேத நாகரீகத்திற்கு முன்பாகவும் இடம்பெற்று இருக்கும், கீழடி நாகரிகத்தை நாம் அனைவரும் போற்றி பாதுகாத்து விட வேண்டும்” என கூறினார்.