பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் த.வெ.க-வில் இணைந்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட த.வெ.க கட்சி அலுவலகத்தில் பூந்தமல்லி தொகுதியை சேர்ந்த காக்களூர் ஊராட்சியில் இருந்து பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் த.வெ.க கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காக்களூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க கட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக நடந்து சென்று த.வெ.க-வில் இணைந்தனர். இதனை அடுத்து மாற்று கட்சியிலிருந்து த.வெ.க-வில் இணைந்த அனைவருக்கும் த.வெ.க கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு நடைபெரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்ற செய்து விஜய்யை முதலமைச்சராக்க பாடுபடுவோம் என உறுதி மொழியேற்று கோஷங்கள் எழுப்பினர்.
















